search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை பணம்"

    கொள்ளையடித்த பணத்தில் நகரியில் சொகுசு பங்களா கட்டி நடிகையுடன் கொள்ளையன் உல்லாசமான வாழ்க்கை நடத்தி வந்துள்ளான். #Robberycase

    பெரம்பூர்:

    பெரம்பூர் பி.பி ரோட்டில் இன்ஸ்பெக்டர் முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரை நிறுத்தி விசாரித்தனர்.

    அதில் இருந்த ஒருவன் தப்பி ஓடிவிட்டான். மற்றொருவனை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவன் தாம்பரத்தை சேர்ந்த ராம்கி என்பதும், தப்பி ஓடியவன் ஆந்திரா மாநில நகரியை சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரிந்தது.

    இருவரும் சேர்ந்து பல்வேறு இடங்களில் வழிப்பறி, கொள்ளை மற்றும் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் கொள்ளையடித்த பணத்தில் நகரியில் சொகுசு பங்களா கட்டி நடிகைகளுடன் உல்லாசமாக இருந்து வாழ்க்கை நடத்தி வந்ததும் தெரிந்தது.

    கைதான ராம்கியின் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளன. 2009-ம் ஆண்டு தாம்பரத்தில் சாதிக் பாட்ஷா, 2015-ல் காஞ்சீபுரத்தில் பெருமான், 2016-ல் வண்டலூரில் விஜயராஜ், 2017-ல் சூலூர் பேட்டையில் பன்னீர்செல்வம் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராம்கிக்கு தொடர்பு உள்ளது.

    இதேபோல் அவன் மீது கோவை, திருவண்ணாமலை, செஞ்சி, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 5 முறை குண்டர் சட்டத்திலும் ஜெயிலுக்கு சென்று உள்ளான்.

    அவனிடமிருந்து ஒரு கார், அரிவாள்கள், 20 பவுன் நகை, செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மீட்கப்பட்ட கார் சேலையூரை அடுத்த அகரம் தென்நகரை சேர்ந்த யாழினி என்பவருக்கு சொந்தமானதாகும். அதனை ராம்கி திருடி நம்பர் பிளேட்டை மாற்றி கொள்ளைக்கு பயன்படுத்தி வந்துள்ளான்.

    தப்பி ஓடிய சுரேசை பிடிக்க தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×